கவிதையிலும், களத்திலும் அசத்தியவர்

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக எத்தனையோ பேர் தங்களது உயிர், உடைமைகளை இழந்துள்ளனர். பலர் கலை, இலக்கியங்கள் மூலம் தேசப்பற்றை வளர்த்து, வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். சிலர் வெளியில் தெரியாமலே மறைந்து விட்டனர். ஆனால், இலக்கியம், கவிதைகள் மூலம் நாட்டுப்பற்றையும், நாட்டின் விடுதலைக்காகவும் பாடுபட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மைதிலி சரண் குப்த். இன்று அவரது நினைவு நாள். அவரது வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோமா? இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கானில் 1886, ஆகஸ்ட் 3ம் தேதி பிறந்தவர் மைதிலி சரண் குப்த். இவரது தந்தை மிகப்பெரிய வியாபாரி. ஆனாலும், இவர் எளிமையாக வாழ்ந்து வந்தார். பள்ளிப்படிப்பை அரசுப்பள்ளி, ஜான்சியில் உள்ள மெக்டானல் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.

விளையாட்டு மீதான ஆர்வத்தால் படிப்பில் போதிய கவனத்தை இவரால் செலுத்த முடியவில்லை. இதனைத்தொடர்ந்து வீட்டிலேயே கல்வி கற்க தொடங்கினார். சமஸ்கிருதம், ஆங்கிலம், வங்க மொழிகளைக் கற்று தேர்ந்தார். இவரது சகோதரர் பிரபல எழுத்தாளராக விளங்கினார். இதனால் இவருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது. 12 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள் எழுதி பிரபலமானார். இவரது கவிதைகள் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.

Related Stories:

>