எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் மக்கள் நீதி மய்யத்தினர் துண்டு பிரசுரம் வழங்கல்

தூத்துக்குடி, டிச. 12: பாரதியார் பிறந்தநாளையொட்டி எட்டயபுரத்தில் அவரது சாதனைகள் குறித்த துண்டு பிரசுரத்தை மக்கள் நீதி மய்யத்தினர் வழங்கினர். பாரதியார் பிறந்தநாளையொட்டி அவரது சாதனைகளை விளக்கி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை எட்டயபுரத்தில் உள்ள அவரது வீடு, மணிமண்டபம்,  பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ெபண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் நிர்வாகிகள் வழங்கினர். தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைமை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்  நடந்த இந்நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ரங்கநாதன், அக்பர், மணிகண்டன், சேர்மதுரை, ராஜேஷ்கண்ணா, பிரபு, தவபுத்திரன், பஷல் பிரபாகரன், மாரியப்பன்  முன்னிலை வகித்து மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.

Related Stories:

>