ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது மாஸ் காட்டிய சுயேட்சைகள்

சிவகாசி, டிச.12:  சிவகாசி பகுதியில் உள்ளாட்சி தேர்தல் களைகட்டியுள்ளது. நேற்று பவுர்ணமி என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் டிச.27, 30ம் தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 16ம் தேதி மனு தாக்கல் செய்ய இறுதி நாள், 17ம் தேதி வேட்புமனு பரிசீலனை, 19ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறுதல் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்த வரையில் 54 ஊராட்சி தலைவர் பதவி, 429 உறுப்பினர் பதவிகளுக்கும், 31 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக வேட்பு மனு தாக்கல் மந்த நிலையில் இருந்தது. நேற்று பெளர்ணமி என்பதால் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தனர். பிரபல அரசியல் கட்சிகள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களை வாகனங்களில் அழைத்து வந்து மாஸ் காண்பித்தனர். மனுத் தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்ததும், ஆதரவாளர்கள் வேட்பாளருக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

வாகனங்களில் அழைத்து வந்தவர்களுக்கு ஆவின் பாலகம் எதிரே உணவு பொட்டலங்கள் மற்றும் சிறப்பு கவனிப்பு வழங்கப்பட்டது. உணவு பொட்டலங்கள் வாங்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை கவனித்து கொண்டிருந்த போலீசார் கண்டும் காணாதது போல் நின்று கொண்டிருந்தனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் சாட்சியாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலக செயலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மனு தாக்கலுக்கு வேட்பாளருடன் முன்மொழிபவர் ஒருவர், வேட்பாளர் விரும்பும் 3 பேர் உள்பட 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் கெடுபிடியால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தாண்டி தாலுகா ஆபிஸ் மற்றும் என்ஜிஓ காலனி சென்ற பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இன்னும் ஒரு சில நாட்களில் அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மனு தாக்கல் ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. ஆதரவாளர்களுடன் வந்து அலப்பறை மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்பு

Related Stories:

>