×

இன்று (டிச.12) மைதிலி சரண் குப்த் நினைவு தினம் மாவட்டம் சர்வர் பிரச்சனையால் தினமும் அலைக்கழிப்பு காப்பீடு திட்ட அலுவலகம் முற்றுகை

மதுரை, டிச.12: முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சர்வர் பிரச்சனையால் தினமும் இங்கு வந்து ஏமாந்து திரும்புவதாக புகார் தெரிவித்தனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் மையம் உள்ளது. இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.5 லட்சம் வரை பயன்பெறலாம். இதனால் சிகிச்சையில் இருப்போர் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பி அதற்கான காப்பீடு அட்டையின் எண் பெற கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். இங்குள்ள காப்பீடு மையத்தின் சர்வர் அடிக்கடி பழுது காரணமாக தினமும் இந்த அலுவலக வாசலில் 50க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். காலை 9 மணிக்கு வரும் அவர்கள் மாலை 5 மணி வரை காத்திருந்து கடைசியில் காப்பீடு அடையாள அட்டை எண் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதனால் குறிப்பிட்ட நேரத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர். மேலும் இணைப்பு வந்தால், 20 பேருக்கு மட்டுமே பதிவு செய்வோம் என கூறி அவர்களிடம் மட்டும் மனு வாங்குகின்றனர். சர்வர் பிரச்னையால், பல நேரங்களில் இணைப்பு கிடைக்காமல் மணிக் கணக்கில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இதுபோன்று தினமும் வந்து செல்லும் நோயாளிகள் சிலர் நேற்று காப்பீடு திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு, இப்படி எத்தனை நாளுக்கு வந்து செல்வது என கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். நாங்கள் என்ன செய்வது, கம்ப்யூட்டர் சர்வர் பிரச்சனை. இதனால்தான் பதிவு செய்ய முடியவில்லை என ஊழியர்கள் கூறினர். அதை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்படவே ஊழியர் ஒருவர், இணைப்பு தொடர்பாக பிஎஸ்என்எல் அலுவலகம் செல்வதாக கூறி சென்றுவிட்டார். வேறு வழியின்றி பொதுமக்கள் நாள் முழுவதும் காத்திருந்தனர். மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும், இங்கு மருத்துவ காப்பீடுக்காக பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் சர்வர் பிரச்சனையால், ஏதுவும் செய்ய முடியவில்லை.  இந்த மையம் முழு திறனுடன் இயங்க அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கூறினர்.

Tags : Maithili Saran Gupt ,
× RELATED மைதிலி சரண் குப்த் நினைவு தினம்...