×

. 10 நாட்களாகியும் மழைநீர் வடியவில்லை 500 ஏக்கர் குறுவை சாகுபடியில் நெற்பயிர்கள் முளைக்க துவங்கியது

கும்பகோணம், டிச. 12: கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நின்றதால் நெற்கதிர்களில் நாற்றுகள் முளைத்து நாசமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்காக காத்திருந்த நெல் வயல்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. கடந்த அக்டோபர் மாதம் பின்பட்ட குறுவை நெல் விதைத்து நாற்றுக்கள் பறித்து நடவு செய்து நிலையில் 500 ஏக்கர் அளவில் அறுவடைக்காக நெல்மணிகள் முற்றியிருந்தது. விவசாயிகள் அறுவடைக்காக காத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் அறுவடை வயல்களில் மழைநீர் வடிய வாய்க்கால் வசதி இல்லாததால் நெற்கதிர்கள் மூழ்கியது. பின்னர் விவசாய கூலி ஆட்களை கொண்டு தண்ணீரை இறைத்து மழைநீரை விவசாயிகள் வடிய வைத்தனர்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா