×

நாட்டை கெடுக்கும் இரட்டையர்கள்

கோவை, டிச. 12:  கோவை கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கூறியதாவது: நம் நாட்டில், கடந்த 15 ஆண்டுகளாக, பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. ‘’சர்க்கரை நோயின் தலைநகரம்’’ இந்தியா என்று கூறுவார்கள். ஆனால், இன்று, ‘’ரேப் கேஸ்’’களின் தலைநகரம் என்றாகிவிட்டது. இது, வேதனையிலும் வேதனை. என்கவுண்டர் நடந்தாலும், பாலியல் குற்றச்செயல் அதிகரிக்கத்தான் செய்கிறது. பலர், என்கவுண்டர் பற்றி அறியாமல், பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களும் அதிகரிக்கிறது. இதற்கு மூலக்காரணம், இரண்டு விஷயம். ஒன்று - டாஸ்மாக் சரக்கு, இன்னொன்று - ஆண்ட்ராய்டு செல்போன். இவை இரண்டும் நாட்டை கெடுக்கும் இரட்டையர்கள். டாஸ்மாக் மட்டுமின்றி, மது, எந்த ரூபத்தில் வந்தாலும் அதை தடைசெய்ய வேண்டும். டாஸ்மாக் சரக்கு காரணமாக, ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள். மது, ஆண்ட்ராய்டு செல்போன் என இந்த இரண்டையும் ஒழித்துவிட்டால், குற்றச்செயல்களை பெருமளவு குறைக்க முடியும். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இளம் தலைமுறையினருக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க ஆளில்லை. கெட்டவை பற்றி தெரிந்துகொள்ள பல வாய்ப்புகள் உருவாகியுள்ளது. மற்றவர்கள் படும் கஷ்டத்தை, நம் கஷ்டமாக எண்ணினால், நாட்டில் கொடூர செயல்கள் எதுவும் நடக்காது. இவ்வாறு டாக்டர் பக்தவத்சலம் கூறினார்.

Tags : Twins ,country ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!