×

களியக்காவிளையில் அடுத்தடுத்து கடைகளில் பூட்டை உடைத்து 42,500 திருட்டு

களியக்காவிளை, டிச. 12: களியக்காவிளையில் ஒரே வணிகவளாகத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து 42,500 திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. மங்காடு பகுதியை சேர்ந்தவர் கிளாட்சன். இவர் களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் ஒரு வணிக வளாகத்தில் எல்ஐசி வீட்டு கடன் வழங்கும் அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அலுவலகம் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது மேஜைகளில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 37,500 திருடப்பட்டிருந்தது. இது குறித்து கிளாட்சன் களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார்.

அதே வணிக வளாகத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தாராம்(38) என்பவர் பேக்குகள் செய்து விற்கும் கடை நடத்தி வருகிறார்.  அவரது கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு ேமஜையில் இருந்த 5000 திருடப்பட்டிருந்தது. பக்கத்து கடையில் பிபிஎம் ஜங்ஷனை சேர்ந்த சகாபுதீன்(43) என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்த நிலையில் காணப்பட்டது. ஆனால் எதுவும் திருடப்படவில்லை. அடுத்தடுத்து 3 கடைகளில் நடந்த திருட்டு குறித்து புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : robberies ,
× RELATED கொள்ளை வழக்கு 4 பேர் கைது