×

இன்று (டிச.11) சர்வதேச மலைகள் தினம் ‘இயற்கை கொலையை’ வேளாண்மை உதவி இயக்குநர் அட்வைஸ் மூணாறில் பூட்டி கிடக்கும் வருவாய்த்துறை அலுவலகம்

மூணாறு, டிச.11: மூணாறில் இக்கா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் சிறப்பு வருவாய்த்துறை அலுவலகம் ஊழியர்கள் இல்லாமல் முடங்கி கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.மூணாறில் சுற்றுவட்டார பகுதிகளில் அரங்கேறும் நில ஆக்கிரமிப்புகள், சட்டத்திற்கு விரோதமாக கட்டிடங்கள் கட்டுதல், அரசு நிலங்களை அபகரித்தல், போலி பட்டாக்கள் போன்றவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த 2010ம் ஆண்டு தனியார் நபர் ஆக்கிரமித்திருந்த இடத்தை அரசு எடுத்து மூணாறு இக்காநகர் பகுதியில் சிறப்பு வருவாய்த்துறை அலுவலகம் அமைக்கப்பட்டது. நிலம் சம்பந்தமாக முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் இந்த அலுவலகம் தற்பொழுது அதிகாரிகள் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. சிறப்பு தாசில்தார் தலைமையில் செயல்பட்டு வந்த அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சில அரசியல் கட்சி தலைவர்கள் நுழைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வரும் ஜனவரி 10ம் தேதி வரை சிறப்பு தாசில்தார் விடுமுறை எடுத்து சென்றுவிட்டார். இவருக்கு பதிலாக துணை தாசில்தார் பொறுப்பு வகித்தாலும் எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.

மேலும் 4 வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டும் இதில் 3 பேர் விடுமுறையில் சென்றுவிட்டனர். 100க்கும் அதிகமான நிலம் சம்பந்தமான வழக்குகளை விசாரணை செய்து வரும் அலுவலகத்தில் தற்பொழுது 1 ஆய்வாளர் மட்டும் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நிலம் சம்பந்தமான வழக்குகளில் அரசியல் கட்சி தலைவர்கள் இடையூறு காரணமாக வருவாய்த்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் பணி செய்ய பயந்து வருவதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்படுவது வாடிக்கையாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் இல்லாமல் தற்பொழுது சிறப்பு வருவாய்த்துறை அலுவலகம் மூடி கிடக்கிறது.இந்நிலையில் ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடம் மிகவும் பழமை அடைந்ததால் எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே வருவாய்த்துறை அலுவலகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Revenue office ,International Mountains 'Natural Kill ,
× RELATED ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே...