×

பிரான்மலையில் கார்த்திகை தீபத் திருவிழா

சிங்கம்புணரி, டிச. 11: சிங்கம்புணரி அருகே, குன்றக்குடி ஆதினத்திற்குட்பட்ட பிரான்மலையில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது.கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த பெருமையும், பாண்டிய நாட்டில் உள்ள 14 திருத்தலங்களில், 5வது திருத்தலமான பிரான்மலையில், மங்கை பாகார் தேனம்மை கோயில் உள்ளது. ஆகாயம், மத்திபம், பாதாளம் என மூன்று நிலைகளில் சிவன் காட்சியளிக்கிறார். எங்கும் இல்லாத சிறப்பாக 2,500 அடி உயர மலையே கொடுங்குன்றமாக காட்சியளிக்கிறது. இதில், நேற்று காலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலை 5.20 மணிக்கு மலை தீபம் ஏற்றப்பட்டது. அடுத்த நிலையில் உள்ள பாலமுருகன் சன்னதியில் உள்ள தீப தொட்டியில் மலை தீபம் ஏற்றப்பட்டது. பிரான்மலை மலை தீபத்தை பார்த பின்புதான் பிரான்மலையிலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவு கிராமங்களான ஒடுவன்பட்டி, சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் விரதத்தை முடித்து வீடுகளில் விளக்கேற்றுவது வழக்கம். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மங்கைபாகர் கோயிலில் லட்ச தீபமும், அதை தொடர்ந்து சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு மலை உச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags : Carnatic Deepath Festival ,France ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...