×

வீடு, கோயில்களில் தீபம்ஏற்றி மக்கள் வழிபாடு

இளையான்குடி, டிச.11: இளையான்குடி பகுதியில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வீடு மற்றும் கோயில்களில் தீபமேற்றி வழிபட்டனர். ரெடிமேட் விளக்குகள், மெழுகு விளக்குகள், மண்ணால் செய்யப்பட்ட கிளியாஞ்சட்டிகள், ஆகியவை மூலம் எண்ெணய் ஊற்றி தீபமேற்றினர். மண்ணால் செய்யப்பட்ட கிளியாஞ்சட்டியை பெண்கள், காலையில் தண்ணீரில் ஊற வைத்து, மதியம் உலர வைத்து பின், மாலை 6 மணியளவில் நல்லெண்னெய் ஊற்றி தீபமேற்றினர். அவ்வாறு ஏற்றப்பட்ட விளக்குகள் வீட்டில் சாமி அறை, துளசி மாடம், மொட்டை மாடி உட்பட அனைத்து பகுதிகளிலும் காய்கறி பந்தல், ஆடு, மாடு மற்றும் கோழி கூடாரங்கள் ஆகியவற்றில் தீபமேற்றி அனைத்து செல்வங்களும் ஒளியைப் போல நிறைந்திருக்க வேண்டும் என வழிபட்டனர். இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயில், ராசேந்திரசோளீஸ்வரர் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், வாணி கருப்பணசாமி கோயில், சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயில், வடக்கு சாலைக்கிராமம் பைரவர் கோயில், அரண்மனைக்கரை கருமேனியம்மன் கோயில், திருவள்ளூர் சங்கையா கோயில் ஆகிய கோயில்களில் பொதுமக்கள் எண்னெய் தீபமேற்றி குடும்பத்துடன் வந்து வழிபட்டனர்.

Tags : houses ,temples ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்