ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில்

திருச்சி, டிச.11: புதிதாக கட்டப்பட்டு ஓராண்டு நிறைவு பெறாத நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோரையாற்று பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை தினகரன் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பஸ்கள், லாரிகள், பள்ளி வாகனங்கள், டூவீலர்கள் என ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. மேலும் இச்சாலை பகுதியில் தனியார் நிறுவனங்கள், ஆர்டிஓ அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இச்சாலையில் அமைந்துள்ள கோரையாறு பாலம் ஒரு வழிப்பாதையாக இருந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

\

மேலும் எதிர் எதிரே 2 வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து கோரிக்கை மனு சம்மந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று இந்த பாலத்தை நெடுஞ்சாலையினர் இரு வழிப்பாதையாக மாற்றி புதிய பாலம் கடந்தாண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 12.12.2018ம் ஆண்டு திறந்து வைத்தார். தொடர் பருவ மழை பெய்ததாலும், தற்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையாலும் தாக்குப்பிடிக்க முடியாதபடி இருவேறு இடங்களில் பாலம் சேதமடைந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு மோசமானது. இதில் தற்போது சிமெண்ட் கலவையை போட்டு நெடுஞ்சாலைத்துறையினர் அதை பூசி மூடிவிட்டனர். மழை மீண்டும் பெய்தால் பாலத்தின் இரு இடங்களில் மறுபடியும் தேமடைந்து ஓட்டை விழும் அவலம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை சரி செய்யாவிட்டால் அந்த பாலம் பலமிழந்து விடக்கூடிய அபாய நிலை உருவாகும் என்று வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக கடந்த 7ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறையினர் கோரையாற்று பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை கலவைகள் போட்டு மூடி போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சீரமைத்தனர். இதே போல பாலத்தின் ஓரத்தில் சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பரவிக் கிடந்ததை அகற்றி சீரமைத்தனர். இதையடுத்து சாலையில் அச்சமின்றி வாகனஓட்டிகள் சென்று வருகின்றனர்.

Related Stories:

>