×
Saravana Stores

பேரையூர் அருகே சேலையில் தீப்பற்றி மூதாட்டி பலி

பேரையூர், டிச. 11: பேரையூர் அருகேயுள்ளது சாப்டூர் வடகரைப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி ஜக்கம்மாள் (75), இவர் கடந்த டிச.5ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த ஜக்கம்மாளை பேரையூர் அரசு மருத்துவமனைக்கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். மதுரையில் சிகிச்சையில் இருந்த ஜக்கம்மாள் நேற்று பரிதாபமாக இறந்து போனார்.இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags : Muthatti ,fire ,Salem ,
× RELATED செங்குன்றம் தீயணைப்பு நிலையம்...