×

அரியலூர், திருமானூர் ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு

அரியலூர், டிச. 11: அரியலூர், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகம், 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் 201 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. அரியலூர் மற்றும் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும், 37 கிராம ஊராட்சித்தலைவர் பதவிக்கும், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 21 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும், 36 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43016 ஆண் வாக்காளர்களும், 42022 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47134 ஆண் வாக்காளர்களும், 47036 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 168 வாக்குச்சாவடிகளும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 190 வாக்குச்சாவடிகளும்அமைக்கப்படவுள்ளன. மேலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களை கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்படும் பணிகளையும் தேர்தலுக்காக வரப்பெற்றுள்ள வாக்குப்பெட்டி, படிவங்கள், கைமை மற்றும் அனைத்து பொருட்கள் உள்ள அறைகளையும் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆய்வுசெய்தார்.ஆய்வின்போது அரியலூர் கோட்டாட்சியர் (பொ) பாலாஜி, உதவி இயக்குநர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, அருளப்பன், செந்தில் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : elections ,union offices ,Ariyalur ,Thirumanur ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி