×

மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளில் 57 பேர் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இரண்டாவது நாளான நேற்று 57 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியங்களுக்கு வருகிற 27ம் தேதியும்,கிருஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி ஒன்றியங்களுக்கு 30ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 333 ஊராட்சி மன்ற தலைவர்கள், 3 ஆயிரத்து 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 221 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 586 பதவிகளுக்கு இந்த தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் போட்டியிட நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாள் 224 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இரண்டாவது நாளாக நேற்று வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 27 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 28 பேரும் என மொத்தம் 57 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் 224 பேர், நேற்று 57 பேர் என இதுவரை மொத்தம் 281 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேப்பனஹள்ளி  : தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று (12ம் தேதி) தீர்ப்பு வழங்க உள்ளதால், வேட்பு மனு தாக்கலில் ஆர்வம் குறைந்துள்ளது.  இதன் காரணமாக நேற்று வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொகுதியில் மாரசந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான திங்களன்று, 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.




Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது