புகையிலை விற்ற 7 பேர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி, டிச.11: ஓசூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதன் பேரில், போலீசார் ஓசூர் பகுதியில் உள்ள டீக்கடை, மளிகை கடை, பேக்கரி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் முருகன் (48), மாரிமுத்து (36), வஜ்ரவேல் (45), சின்னப்பையன் (42), ராஜூ (29), சுரேஷ் (42), சிவா (42),  ஆகியோர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 7 பேரையும் கைது செய்தனர்.

Related Stories:

>