மது விற்றதாக ஒரே நாளில் 16 பேர் கைது

ஈரோடு, டிச. 11:  உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து ஆறு குழுக்களாக 54 மதுவிலக்கு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, உள்ளூர் போலீசாரும் மதுவிலக்கு தொடர்பாக வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். நேற்றுமுன் தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 16 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டனர்.  
இதில், ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீசார் 5, கோபி மதுவிலக்கு 9, வரப்பாளையம் போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 120 மதுபான பாட்டில் கைப்பற்றப்பட்டன. மது விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட பைக் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED மதுபாட்டில் விற்றவர் கைது