ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்: திரையுலகினர், ரசிகர்கள் பங்கேற்பு

சென்னை: தென்சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ரஜினியின் 70வது பிறந்தநாள் விழா நாளை மாலை 4 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.விழாவுக்கு தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்குகிறார். இணை செயலாளர் என்.ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட துணை செயலாளர்கள் பழனி, முருகன், மாரி, பிரேம்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண் நாராயணமூர்த்தி, இணை செயலாளர் நவீன்ஷா ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுந்தர், தி.நகர் ரவிச்சந்திரன், ராஜன், ஜெகன், பிரபு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி விஎம்.சுதாகர், நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதில் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குனர் எஸ்பி.முத்துராமன், கலைப்புலி தாணு, பி.வாசு, சுரேஷ்கிருஷ்ணா, கேஎஸ்.ரவிக்குமார், ராகவா லாரன்ஸ், நடிகை மீனா, கராத்தே தியாகராஜன், மூத்த பத்திரிகையாளர் ரமேஷ், ரவீந்திரன் துரைசாமி, வரதகுட்டி உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். எனவே, அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்ளவேண்டும் என்று ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Rajini Birthday Celebration ,
× RELATED உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி