×

ஆவடி ரயில் நிலையத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

ஆவடி, டிச. 11:    ஆவடி ரயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகமாகவே உள்ளது.  இங்குள்ள ரயில்வே பிளாட்பாரம், டிக்கெட் கவுன்டர், ரயில்வே கேட், சாலையில் நாய்கள் சுற்றி திரிக்கின்றன. இவை ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பாஸ்ட் புட், இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை சாப்பிடுகின்றன. பின்னர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்கள் முன்பு படுத்துக்கொள்கின்றன.  இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர்.   மேலும் சில நேரங்களில் அவசரமாக டிக்கெட் எடுக்க வரும் பயணிகள் நாய்களை மிதித்து விடுகிறார்கள். அப்போது அந்த நாய்கள் வெறிகொண்டு பயணிகளை கடித்து விடுகின்றன.  அதோடு மட்டுமல்லாமல் மின்சார ரயிலுக்கு பிளாட்பாரத்தில் காத்திருக்கும் பயணிகளை தூரத்துவதால் பயணிகள் கீழே விழுகின்றனர். ரயில்வே கேட் அருகில் இரவில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. அங்கு இரவில் தண்டவாளத்தை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளை நாய்கள் விட்டு வைப்பதில்லை.

இதுகுறித்து பயணிகள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கூறியபோதும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ரயில் நிலையத்திற்கு மும் வரும் பயணிகள் நாய்களால் இன்னலுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆவடி ரயில் நிலைய பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்துமாறு பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளோம். ஆனால் அவர்கள் நாய்களை பிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதன் காரணமாக ரயில் நிலையத்தில்  நாய்கள் தொல்லையால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்’’ என்றார்.

Tags : street harassment ,train station ,Avadi ,
× RELATED தங்கம் சவரனுக்கு 56 அதிகரிப்பு