ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி, டிச. 11: பொன்னேரி அடுத்த பெரியகாவணம் ரயில்வே கேட் அருகே பொன்னேரி எஸ்ஐ சிவராஜ்,  சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், காவலர் சம்பத்குமார் ஆகியோர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொன்னேரியில் இருந்து வந்த மினி லாரியை சோதனை செய்தனர்.  அதில்,  ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். விசாரணையில்,  பொன்னேரியில் இருந்து ஆந்திராவுக்கு  50 மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர் வீரமணி (40) என்பவரை கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Andhra Pradesh ,
× RELATED தூத்துக்குடியில் இருந்து டெம்போ...