×

காஞ்சி புதிய ரயில் நிலையம் அருகே விபத்தை தவிர்க்க ரயில்வே கேட்டை ஆபத்தான முறையில் கடக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம், டிச.11:  காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் வழியாக காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை,பரந்தூர், மீனாட்சி மருத்துவமனை, அண்ணா பொறியியல் கல்லூரி, பெரும்புதூர், பூந்தமல்லி, சென்னை உள்பட பல பகுதிகளுக்கு பஸ், கார், வேன், பைக், லாரி என அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கார்கள், பஸ்கள், பைக்கில் செல்வோர் என ஏராளமான வாகனங்கள், இரு புறமும் அதிகளவில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை, மீனாட்சி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த கேட் மூடப்படும் போது, அவ்வழியாக ரயில் சென்றபின் செல்வதற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், பைக்கில் செல்லும் சிலர், பொறுமை இல்லாமல் கேட் மூடியிருக்கும்போது ஆபத்தான முறையில் கீழ் பகுதியில் நுழைந்து தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். பெண்களும் சிலர் இவ்வாறு கடந்து செல்கின்றனர்.

இதுபோன்ற நேரங்களில், அந்த தடத்தில் ரயில் வந்தால், பெரும் விபத்து ஏற்படும்.இதுபோன்ற ஆபத்தை தடுக்க, ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக, புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பொன்னேரி ஏரி உள்பட இரு புறமும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால், இடையில் இணைக்க வேண்டிய பணிகள் கிடப்பில் உள்ளது.எனவே, உடனடியாக மேம்பாலப் பணிகளை முடுக்கி விட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும். ரயில்வே கேட்டை ஆபத்தான முறையில் கடப்பதை தடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,accident ,train station ,Kanchi ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!