×

கொலையான இளம்பெண் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்

காஞ்சிபுரம், டிச.11: காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் அருகே ஆண்டி சிறுவள்ளூரை சேர்ந்த இளம்பெண் ரோஜா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இளம்பெண் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிடம். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பரந்தூரை அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் இளம்பெண் ரோஜா வழக்கில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய இழப்பீடு இதுவரை வழங்கவில்லை. அதற்கான ஆவணங்களை வழங்குவதிலும் மாவட்ட நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் கொலையான தம்பி சிட்டியம்பாக்கம் நவீன் குடும்பத்துக்கும் இதுவரையில் உரிய இழப்பீடு வழங்கவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்ட நாளையும் அம்பேத்கர் ஜெயந்தி விழாவையும் பள்ளிகளில் விழா எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறுப்பட்டு இருந்தது. அப்போது, மண்டலச் செயலாளர் சூ.க.விடுதலை செழியன், மாவட்ட துணைச் செயலாளர் திருமாதாசன், மக்கள் மன்றம் மகேஷ், ஜெசி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மதி. ஆதவன், அசோக், தாவீது, சிலம்பரசன், ரஜினிகாந்த் உள்பட பலர் இருந்தனர்.

Tags : teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை