×

இளம் விஞ்ஞானிகளுக்கான விருது போட்டி

காஞ்சிபுரம், டிச.11: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த மணப்பாக்கம் ராம் சந்திரா மிஷன் ஹெல்த் சென்டரில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் இளம் விஞ்ஞானிகளுக்கான விருது போட்டி நடந்தது. இதில், காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு அறிவியல் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்கள் கலைமதி, தருண்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு சூரியகாந்தி மலரின் தொழிற்நுட்பத்தில் இயங்கும் சோலார் பேனலை நிறுவினால், மின்சார உற்பத்தியை அதிகப்படுத்த முடியும் என்ற செயல்திட்ட அறிவியல் செயல் மாதிரிகளை கொண்டு விளக்கினர்.

இந்தப் போட்டியில் சென்னை மண்டல அளவில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை சேர்ந்த அரசு, மெட்ரிக்,  சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டிக்கான முடிவு ஆன்லைனில் பின்னர்  அறிவிக்கப்படும். இதில் தேசிய அளவில் வெற்றி பெறும் 3 மாணவர்கள், அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையம், மலேசியா அழைத்து செல்லப்படுவர். இந்திய அளவில் முதல் 100 இடங்களை பெறும் மாணவர்களுக்கு விண்வெளி சார்ந்த பயிற்சியும் சுற்றுப்பயணமும் அழைத்து செல்லப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சேகர் செய்தார்.

Tags : Award competition ,scientists ,
× RELATED திருச்சி தேசிய அறிவியல் மாநாட்டிற்கு...