×

செங்கல்பட்டில் காவலன் செயலி அறிமுகம்

செங்கல்பட்டு, டிச. 11: செங்கல்பட்டு நகர போலீசார் சார்பில் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதி தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு காவலன் செயலியை அறிமுகம் செய்து, அதன் செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று  செங்கல்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு கருதி செங்கல்பட்டு நகர காவல்துறை சார்பில் காவலன் செயலியை எஸ்ஐ பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, இந்த செயலி மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க செயலியை செல்போன்கள் மூலம் தகவல் கொடுத்தால், அடுத்த 10 நிமிடத்தில் காவலர் வருவார் என கூறினார். இதில் அரசு கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Introduction ,Police Processor ,Chengalpattu ,
× RELATED நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு...