×

தூத்துக்குடியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மாநகராட்சியை மக்கள் முற்றுகை

தூத்துக்குடி:  தூத்துக்குடியில்  கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 10 நாட்களுக்கு மேலாகியும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிந்தபாடில்லை. இதனிடையே தொடர் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் அன்னை தெரசா மீனவர்  காலனியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் புகுந்ததால் அங்குள்ள முகாமில்  250க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும் அங்கு அவர்களுக்கு சரிவர உணவு வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.  இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், மாநகரில் கழிவுநீருடன் கலந்து தேங்கிநிற்கும் மழைநீரை உடனடியாக அகற்றக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் சங்கரன் தலைமையில்  மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டுசென்றதோடு முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தினர். பின்னர் கோரிக்கை மனுக்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் அளித்துவிட்டு திரும்பினர். போராட்டங்களால் தூத்துக்குடியில் சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.

Tags : Corporation ,Thoothukudi ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு