திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் மாதம் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ரேஷன் கடை

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் மாதம் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ரேஷன் கடையால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் மாதம் ஒரு முறை மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.மேலும் விற்பனையாளர் கடை திறக்கப்படும் அன்று ஒரு நாள் மட்டுமே அனைத்து  பொருட்களும் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு பொதுமக்கள் காலை முதலே வந்து கடை திறப்பதற்கு முன்னரே காத்துக் கிடக்கின்றனர்.மேலும் கடை திறக்கும் அன்றைய தினத்தில் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது இல்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், ரேஷன் கடை தினமும் திறந்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம். ஆனால் மாதம் ஒரு முறை மட்டுமே திறக்கப்படுவதால் அன்றைய தினத்தில் ஏராளமான பொதுமக்கள் ஒரே நாளில் கூடுவதால் கூட்ட நெரிசலில் பொருட்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வயதானவர்கள், கைக்குழந்தையுடன் பெண்களும் பல மணி நேரம் காத்திருந்து பொருட்களை வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடையை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>