அண்ணனை மண்வெட்டியால் தாக்கிய தம்பி கைது

புவனகிரி: புவனகிரி அருகே உள்ள பு.கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன்கள் தண்டபாணி(37) மற்றும் சுரேஷ்(33). சகோதரர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள சமையல் அறையில் சுரேஷின் மனைவி சமையல் செய்துள்ளார். அப்போது சுரேஷின் அண்ணன் தண்டபாணி இதுபற்றி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ். தனது அண்ணன் தண்டபாணியை ஆபாசமாக திட்டி, அருகிலிருந்த மண்வெட்டியை எடுத்து தலையில் தாக்கி, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் தலையில் காயமடைந்த தண்டபாணி சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தண்டபாணி மருதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அண்ணனை தாக்கிய தம்பி சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மது அருந்த பணம் கேட்டு தொல்லை...