×

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் விருத்தாசலம் அரசு கலைக்கல்லூரி தேர்வு

விருத்தாசலம்:  உள்ளாட்சி தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை தேர்வு செய்யும் பணியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.அதன்படி விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மையம் ஆக தேர்வு செய்யப்பட்டு அதனை ஆய்வு செய்யும் பணியில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறுகையில்,  தேர்தல் நடத்துவதற்கான அனைத்து வாக்குப்பெட்டிகள் மற்றும் தேர்தல் நடத்துவதற்கான 21 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு 14 மையங்களை தேர்வு செய்துள்ளோம். அதன்படி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியை தேர்வு செய்து ஆய்வு செய்து வருகிறோம். தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பண்ருட்டி அருகே நடுக்குப்பம் என்ற பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் எடுக்கப்பட்டதாகவும், அதற்கு ஒரு நபர் பணம் கட்டியதாகவும் கூறு கிறார்கள்.

ஆனால் இது குறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் மற்றும் பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலரை அனுப்பி ஆய்வு நடத்தினோம். ஆனால் அந்த ஆய்வில் அது போன்ற நிகழ்வு அங்கு நடக்கவில்லை எனவும், கோயில் சம்பந்தமாக கூட்டம் போட்டதாகவும் அது குறித்து விவாதம் நடந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்த கிராமத்தில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால் தான் இப்படி ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள். அதனால் எந்த ஒரு நபர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. அவ்வாறு கடலூர் மாவட்டத்தில் யாரேனும் தேர்தலுக்காக தன்னை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு நபர் பணம் கொடுத்தாலும், தன்னை தேர்வு செய்வதற்கான உந்துதல் ஏற்படுத்தினாலும், அவர்கள் மீது தேர்தல் நடத்தை விதி 11ன் கீழ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து பொதுமக்களும், வாக்காளர்களும் தேர்தலை நல்ல முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றார். விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : Elections Voting Center ,Virtachalam ,Government Govt ,
× RELATED விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை