×

கிராம மக்கள், ெதாழிலதிபர்கள் முயற்சியால் நடந்தது விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அழுகிய வெங்காய பயிர்களை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்


திருவில்லிபுத்தூர், டிச. 10: திருவில்லிபுத்தூர்  ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்,  விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கி முன்னாள் எம்பிக்கள் அழகிரிசாமி மற்றும்  லிங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் பேசினர். அப்போது நோய் தாக்கி அழுகிய வெங்காய பயிர்களுக்கும், வெங்காய விவசாயிக்கு  ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி விளக்கிப் பேசினர்.

மேலும் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் அழுகிய நிலையில் இருந்த  வெங்காயத்தை ஆர்ப்பாட்டத்தின் போது தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க தலைவர் முருகன், செயலாளர் சௌந்தரபாண்டியன், மனோகரன்,  நடராஜன், செல்வம் மற்றும் ஊர் தலைவர்கள் மாரிமுத்து, மாயகிருஷ்ணன்,  பாண்டியராஜ், பாலகிருஷ்ணன், விவசாய சங்க தலைவர் சேது, விவசாய சங்க  திருவில்லிபுத்தூர் தாலுகா தலைவர் பலவேசம் மற்றும் சிபிஐ நகர செயலாளர்  மூர்த்தி, ஒன்றிய செயலாளர் வேதநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,employers ,Farmers' Union ,ground ,
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி...