×

தேவதானப்பட்டியில் அதிவேகமாக செல்லும் ஷேர் ஆட்டோக்களால் ஆபத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

தேவதானப்பட்டி, டிச. 10: தேவதானப்பட்டி பகுதியில் அதிவேக ஷேர் ஆட்டோக்களால் பயணிகள் அச்சத்துடன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்கின்றனர். தேவதானப்பட்டியில் வைகை அணை பிரிவு,  காமாட்சியம்மன் கோயில் பிரிவு, பஸ்நிலையம், காட்ரோடு, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், உள்ளிட்ட இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன. தேவதானப்பட்டியில் இருந்து ஜெயமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கும், ஜெயமங்கலத்தில் இருந்து தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ஒரு சில ஷேர் ஆட்டோக்கள் விதிமுறைகளை கடைப்பிடித்து இயக்குகின்றனர்.

ஆனால், ஒரு சில ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி  அளவிற்கு அதிகமான ஆட்களை ஏற்றி அதிக வேகத்துடன் செல்கின்றனர். மேலும் ஆட்டோவில் உள்ள ஸ்பீக்கரை அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி முன்பு செல்லும் வாகனத்தை முந்திச்செல்கின்றனர். இதனால் அந்த ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்கின்றனர். இப்படி அதிக ஆட்களை ஏற்றி அதிவேகத்துடன் செல்லும் போது அவ்வப்போது லேசான விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே, தேவதானப்பட்டி பகுதியில் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிவேகத்துடன் செல்லும் ஆட்டோக்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devadanapatti ,
× RELATED தேவதானப்பட்டி பகுதியில் தென்னை...