×

பொன்னமராவதிக்கு இரவு நேர பேருந்து வசதி வேண்டும் வர்த்தக கழகம் கோரிக்கை

பொன்னமராவதி, டிச.10:பொன்னமராவதியில் வர்த்தக கழக 46வது ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டத்திற்கு தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் முகமதுஹனிபா ஆண்டறிக்கை வாசித்தார்.
பொருளாளர் தேனப்பன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பொன்னமராவதிவதிக்கு இரவு நேர பேரூந்து வசதி செய்து தரவேண்டும், பொன்னமராவதியினை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கோட்டமாக உருவாக்க வேண்டும், ரயில் பாதை உருவாக்க வேண்டும், இந்திராநகர் சாலையினை விரைந்து புதிதாக போடவேண்டும், பொன்னமராவதியில் சார்பு நீதிமன்றம் உருவாக்க வேண்டும் அமரகண்டான் குளத்தை மேம்பாடு செய்து பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

Tags : Business Corporation ,Ponnamaravathi ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...