×

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியளவில்

கறம்பக்குடி, டிச.10: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 39 ஊராட்சிகள், 16 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மற்றும் 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாவட்ட ஊராட்சிகள் செயலர் லெட்சுமி மற்றும் நல தேவன் ஆகியோர் செயல்பட்டனர். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக 10 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறுவதற்காக நியமிக்கப் பட்டு உள்ளனர். அதேபோல ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுக்கள் பெறுவதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர்.

நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலை 5 மணி வரை ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை. மேலும் மொத்தம் இந்த பதவிக்கு சுமார் 120க்கும் மேற்பட்ட வேட்பு மனு படிவத்தை அலுவலர்கள் வழங்கியுள்ளனர். மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் மாலை வரை மொத்தம் 10 பேர் உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். குறிப்பாக திமுக மீண்டும் தேர்தல் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்து உள்ளதன் காரணமாக. உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட விரும்பும் அனைவரும். தீர்ப்புக்கு பிறகே தாக்கல் செய்ய விரும்புவதாக தெரிவிக்கின்றனர்.

Tags : Karambakkudi Panchayat ,
× RELATED கறம்பக்குடி அருகே தைல மரக்காடு தீயில் எரிந்து சேதம்