சேந்தமங்கலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேந்தமங்கலம், டிச.10: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை, கனரா வங்கி மற்றும் மதுரை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு அமைப்பாளர் சாய்பாலமுருகன் தலைமை தாங்கினார். நாமக்கல் தாலுகா ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்க  செயலாளர் முத்துராஜா கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். மதுரை கண் மருத்துவமனை மருத்துவர் மேத்தா, மேற்பார்வையாளர் போஸ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனர். இவர்களில் 42 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் நிர்வாகிகள் வெங்கடேசன், பாலமுருகன், செல்வம், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Free Eye Treatment Camp ,Sandamangalam ,
× RELATED ரயில்வேதுறை கவனிக்குமா? குரவப்புலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்