×

பூக்கள் விலை உயர்வு

ஓசூர், டிச.10: ஓசூரில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, தளி, பாகலூர் மற்றும் கர்நாடக-தமிழக எல்லை பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி, சாமந்தி, கனகாம்பரம், ரோஜா, மல்லி, அரளி, கோழிக்கொண்டை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது ஓசூரில் கடும் குளிர் மற்றும் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பூக்கள் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.  குண்டுமல்லி கிலோ ₹1200, கனகாம்பரம் ₹1200, ரோஸ் ₹200, சாமந்தி ₹130, ₹சம்பங்கி ₹100, செண்டுமல்லி ₹70 என விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா