வட்டார பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ கராத்தே போட்டி

கூடலூர், டிச. 10: கூடலூர் வட்டார பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ கராத்தே போட்டி மலர் வயல் சென் செபஸ்டியன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி நிர்வாகி ரேகா, மனித உரிமைகள் கழக நிர்வாகி ரிசால் பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நீலகிரி டேக்வாண்டோ கராத்தே கூட்டமைப்பு சார்பில் சுரேஷ்குமார், வேளாங்கண்ணி ஜோசப், ரஞ்சித்குமார், மணிகண்டன், திலீபன், ரோஷன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினர். வட்டார அளவில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories:

>