×

கடையம், ஆழ்வார்குறிச்சிக்கு சப்டிவிஷன் தெரியாமல் திணறும் போலீசார்

கடையம்,டிச.10:  தென்காசி மாவட்டத்துடன் கடையம் குறுவட்டம், ஆழ்வார்குறிச்சி குறு வட்டங்கள் இணைக்கபட்டது. இதனையடுத்து அதற்கான வரையரைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.  கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையங்கள் அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சப் டிவிசன் கட்டுபாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்சப்களில் கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையங்கள் ஆலங்குளம் சப் டிவிஷனுடன் இணைக்கபட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அரசு அதிகாரிகள் தரப்பிலும் இதற்கு சாதகமாக பதில் வருகிறது. ஆனால் இது தொடர்பான  அதிகாரபூர்வமாக எந்த ஒரு  அறிப்பாணையும் அரசு இதுவரை அறிவிக்கபடவில்லை. தற்போது கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி மக்களிடத்தில் முக்கியமான பிரச்னைகள் குறித்து முறையிட அம்பை செல்வதா? ஆலங்குளம் செல்வதா? என  தெரியாமல் திணறி வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகளில் சமரசம் செய்ய வழியில்லாமல் பிரச்னை வளரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சமுதாய சீர்கேடு ஏற்பட்டு குற்றங்கள் அதிகரிக்கும் அபாயம் உருவாகி வருகிறது. மேலும் அரசியல் கட்சியினர் கூட்டத்திற்கோ, ஆர்பாட்டத்திற்கோ  எந்த சப்டிவிஷனில் சென்று  அனுமதி வாங்க வேண்டும் என தெரியாமல் புலம்பி வருகின்றனர். இந்த குளறுபடியில் போலீசாரும் தப்பவில்லை. ஒரு குற்றவாளி பிடிபட்டால் எந்த டிஎஸ்பியிடம் அதுபற்றி கலந்துரையாட வேண்டும். எந்த அதிகாரியிடமிருந்து வரும் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். குண்டர் சட்டம் போட வேண்டுமானால் எந்த கலெக்டரை அணுக வேண்டும் என பல்வேறு அதிகாரிகள் கொடுக்கும்  அழுத்தத்திற்கு ஆளாகி  பரிதவித்து வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையங்கள் எந்த சப் டிவிசன் கீழ் செயல்படுகிறது என்பதை விளக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : shop ,
× RELATED எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய வாலிபர் கைது