இம்பிளான்ட் பல் சிகிச்சை குறித்து ஈடன்ஸ் மருத்துவர் சிறப்புரை

நாகர்கோவில், டிச. 10:  கோவையில் தமிழ்நாடு பல் மருத்துவ சங்க மாநாடு நடந்தது. மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் நாகர்கோவில் பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மருத்துவமனையின் முகசீரமைப்பு மருத்துவரும், ராஜாஸ் பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியருமான டாக்டர் தினக்ஷ் குமார் கலந்துகொண்டு இம்பிளான்ட் முறையில் நிரந்தர பல் பொருத்துதல் குறித்து பேசினார். அவரை பல் மருத்துவ சங்க செயலர் டாக்டர் செந்தாமரைகண்ணன், தலைவர் டாக்டர் பாஸ்கர், அகில இந்திய பல் மருத்துவ சங்க உதவி தலைவர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories:

>