×

18 கோடி மதிப்பில் அரசு தலைமை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம்

திருவள்ளூர், டிச.10:  திருவள்ளூர்அரசு மருத்துவ மனைக்கு 18 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப் பட்டுள்ள கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என கலெக்டர் தெரிவித் துள்ளார். திருவள்ளூர், மாவட்ட  தலைமை அரசு மருத்துவமனை 10.2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.  260 படுக்கை வசதி கொண்ட இம்மருத்துவமனையில், தற்போது, ரூ.18 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் ஆறு அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு, பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த புதிய கட்டடத்தில், ஐந்து அறுவை சிகிச்சை அரங்குகள், சுக பிரசவ வார்டுகள், அறுவை சிகிச்சைக்கு பின், தாய், சேய் படுக்கை வசதி கொண்ட வார்டு ஆகியவை அமைகிறது. இங்கு, 100 படுக்கை வசதிகள் கூடுதலாக அமைய உள்ளது. இதன் மூலம், படுக்கைகள் வசதி எண்ணிக்கை, 360 ஆக உயரும். மேலும், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதியும் உள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில்,  ‘’மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 10.2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, நவீன அறுவை சிகிச்சை அரங்கு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை, ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.

Tags : building ,facilities ,Government Head Hospital ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...