செய்யூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘காவலன் செயலி’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்யூர், டிச.10: செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ‘’காவலன் செயலி’’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்யூர் காவல் துறை சார்பில் நடந்தது. பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியான தொல்லைகளில் இருந்து காப்பதற்காக தமிழக அரசு, காவல் செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதனை எவ்வாறு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் இடையே போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செய்யூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ‘’காவலன் செயலி’’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, கலந்துகொண்டு மாணவிகளுக்கு காவலன் செயலியை அறிமுகப்படுத்தினார்.தொடர்ந்து மாணவிகள் ஒழுக்கம் குறித்தும், சமூக விரோதிகளின் பாலியல் ரீதியான தொல்லைகளில் இருந்து மாணவிகள் எப்படி தற்காத்து கொள்வது, பாலியல் தொல்லை ஏற்படும் நேரத்தில், காவலன் செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்.இதில், பள்ளி தலைமை ஆசிரியர் காஞ்சனா, பள்ளியின் உதவி ஆசிரியர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>