தாமல் கிராமத்தில் நெடுஞ்சாலை பணிக்காக அடைக்கப்பட்ட ஏரி பாசன கால்வாய்

காஞ்சிபுரம், டிச. 10: காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில் நெடுஞ்சாலைப் பணிக்காக தூர்க்கப்பட்ட ஏரிப்பாசன கால்வாயை மீண்டும் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் எழிலன், கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் தாமல் கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு நெடுஞ்சாலைப் பணிகள் நடந்தது. அப்போது, தாமல் ஏரியில் இருந்து சுமார் 300 ஏக்கருக்குமேல் பாசன வசதி பெறும் பாசன கால்வாய் தூர்க்கப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் நடந்தன.

இதுபற்றி பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் சார்பில் மனுக்களும், வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால், மீண்டும் சாலை விரிவாக்க பணிகள் நடக்கின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுமார் 300 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் தாமல் ஏரி பாசன கால்வாயை தூர்வாரி சீரமைத்து தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>