அரூர் பகுதியில் மரவள்ளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

அரூர், டிச.9: அரூர் பகுதியில் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள், மரவள்ளி கிழங்கை சாகுபடி செய்து வருகின்றனர். வறட்சியை தாங்கி வளரும் பயிர் என்பதால் விவசாயிகள் ஆர்வமும் பயிரிடுகின்றனர். தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மரவள்ளி கிழங்கு 70 கிலோ கொண்ட மூட்டை விவசாயிகளிடமிருந்து ₹510க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் சரியான விலை கிடைக்காமல் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே 70கிலோ மூட்டைக்கு ₹800 வழங்க அரசு முன் வர ேவண்டும் என்றனர். மேலும் இப்பகுதியில் மரவள்ளி அதிகம் பயிரிடப்படுவதால், கூட்டுறவு விற்பனை நிலையம் அமைத்து, அதன் மூலம் கொள்முதல் செய்தால், இடைதரகர்கள் இன்றி சரியான விலைக்கு, மரவள்ளி கிழங்கை விற்பனை செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>