வணிகர்கள் முடிவு சுக்காம்பாரில் மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு

திருக்காட்டுப்பள்ளி, டிச. 9: தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே சுக்காம்பாரில் “விவசாயம் காப்போம்- விவசாயம் வளர்ப்போம்” என்ற தலைப்பில் சுக்காம்பாரில் இருந்து கல்லணை பாலம் வரையில் 10 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டப்போட்டி நேற்று நடந்தது. இதில் தஞ்சை மற்றும் வெளிமாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.சுக்காம்பார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து போட்டியை பங்குதந்தை மரியதாஸ் துவக்கி வைத்தார். இதில் முதல்கட்டமாக வாலிபர்கள் பங்கேற்ற ஓட்டம் நடந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சந்துரு முதலிடம் பிடித்தார். திருவையாறு பிரகதீஸ்வரன் இரண்டாமிடமும், திண்டுக்கல் கார்த்திக் மூன்றாமிடமும் பிடித்தனர். இரண்டாம் கட்டமாக நடந்த இளம்பெண்கள் பங்கேற்ற போட்டியில் திருச்சி ஜோதி முதலிடம் பிடித்தார். வடசேரி யுகா இரண்டாமிடமும், பெரம்பலூர் கிருத்திகா மூன்றாமிடமும் பிடித்தனர்.

இதையடுத்து பங்குதந்தை பேசுகையில், விவசாயத்தின் அவசியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி அமைந்துள்ளது. இதுபோன்ற போட்டிகள் இளைஞர்களை உடல் ஆரோக்கியத்துடன் நல்ல வழியில் கொண்டு வர உதவும் என்றார். இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்தனர். கல்லணை அருகே குக்கிராமத்தில் யூத் கிளப் இளைஞர்கள் நடத்திய இப்போட்டியில் வெளியூர் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Related Stories:

>