தலைமை செயலக பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், ஜோதி நகரை சேர்ந்தவர் சுசிலா (57). சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் மாநகர பஸ் மூலம் இரவு 7.30 மணியளவில் சிட்லப்பாக்கம் வந்து இறங்கினார். அங்கிருந்து ஜோதி நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 பேர், சுசிலா கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

* சென்னை கோபாலபுரத்தை ேசர்ந்தவர் ரமேஷ் (34). ராயப்பேட்டை ஐஓபி வங்கியில்  அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின்  அருகே நடந்து சென்றபோது, 2 பேர், இவரை மறித்து கத்தி முனையில் அவரது 4  சவரன் செயின் மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.

* பெரவள்ளூர் ஜிகேஎம் காலனியை சேர்ந்த யோகேஸ்வரன் (19) என்பவரை முன்விரோத தகராறில் வெட்டிய வழக்கில், அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (25), சந்தோஷ்குமார் (25), திருவிக நகரை சேர்ந்த ஆகாஷ் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

* திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா, செக்குமேடு கிராமத்தை சேர்ந்த பூவரசன் (21), தாம்பரத்தில் தங்கி, பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தனது நண்பர் ரவீந்திரன் (28) என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு பெருங்குடி, திருமலை நகர் 3வது மெயின் ரோட்டில் சென்றபோது லாரி மோதியது.இதில், படுகாயமடைந்த பூவரசன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ரவீந்திரன் 2 கால்களும் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பெருங்குடி, கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்த லாரி டிரைவர் யுவராஜ் (24) என்பவரை கைது செய்தனர்.

* புதுவண்ணாரப்பேட்டை கீரை தோட்டம் பகுதியில் பைக் திருடிய வழக்கில், ஓராண்டாக தலைமறைவாக இருந்த ரமேஷ் (எ) ரங்கராஜ் (23) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

* மகளை தகாத வார்த்தையால் திட்டியதை தட்டிக்கேட்ட புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர் (34) என்பவரை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், ரஜினி ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பழனி (34), கருணாகரன் (32) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>