குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் நகராட்சி அதிகாரிகள் மெத்தனம்

ராஜபாளையம், டிச. 5:  ராஜபாளையத்தில் குழாய் உடைப்பால், பல லட்சம் லிட்டர் குடிநீர் தினசரி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. சீரமைக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். ராஜபாளையத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை நீர்த்தேக்கத்தில் தேக்கி வைத்து, அதை சுத்திகரித்து நகர் பகுதி பொதுமக்களுக்கு வாரம் ஒருமுறை நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்கிறது. தற்போது நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளால் நகரின் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. குழாய்களை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

உள்ளது.

மேலும், மழையால் நகர்ப்பகுதி முழுக்க சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் நடமாட முடியவில்லை. எனவே, குடிநீரை வீணடிக்காமல்  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>