×

2 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பறக்கப்போகிறது ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்: 2022ல் உள்நாட்டு சேவை துவக்கம்

புதுடெல்லி: அதிக கடன் சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடந்த 2019 ஏப்ரலில் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. அதை மீண்டும் இயக்க, ‘ஜலான் கால்ரோக்’ என்ற கூட்டமைப்பு முன்வந்தது. ஜெட் ஏர்வேஸை கால்ரோக் கூட்டமைப்பு ஏற்று நடத்துவதற்கு, கடன் வழங்கிய நிறுவனங்களும் , தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயமும் ஏற்றுக் கொண்டன. இதைத் தொடர்ந்து  அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மீண்டும் உள்நாட்டு சேவைகளை துவக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கார்லோக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘முதலில் டெல்லி- மும்பைக்கு உள்நாட்டு விமான சேவை துவக்கிய பிறகு ஆண்டின் இறுதி காலாண்டில் குறுகிய தூர பன்னாட்டு சேவைகளை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ,’என கூறப்பட்டுள்ளது….

The post 2 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பறக்கப்போகிறது ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்: 2022ல் உள்நாட்டு சேவை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Jet Airways ,Domestic Service ,New Delhi ,Homeland Service ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு