×

பொதுமக்கள் கடும் அவதி திருவாரூர் மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்க 7,96,180 பேர் தயார்

திருவாரூர், டிச.5: திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஒன்றியங்களிலும் மொத்தம் 7 லட்சத்து 96 ஆயிரத்து 180 வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒன்றிய வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவேண்டிய உள்ளாட்சி தேர்தல் என்பது பல்வேறு காரணங்களினால் கடந்த 3 ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இதற்கான தேதி என்பது மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் இதுநாள் வரையில் உள்ளாட்சி தேர்தல் என்பது ஒரே மாதிரியாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் என அறிவிக்கப்பட்டு வரும் 27 ந் தேதி முதல் கட்டமாகவும் 30ந்தேதி 2ம் கட்டமும் தேர்தல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதி தேர்தலையொட்டி மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 430 ஊராட்சி தலைவர் பதவி, 3 ஆயிரத்து180 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி மற்றும் 176 ஊராட்சி ஒன்றியக் குழு கவுன்சிலர்கள் மற்றும் 18 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகியவற்றிற்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த ஊரகப் பகுதிகள் அனைத்திலும் 3 லட்சத்து 9 ஆயிரத்து 843 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 309 பெண் வாக்காளர்கள் மற்றும் 3ம் பாலினத்தவர் 28 பேர் என மொத்தம் 7 லட்சத்து 96 ஆயிரத்து 180 வாக்காளர்கள் உள்ள நிலையில் இவர்களுக்காக மொத்தம் ஆயிரத்து 771 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒன்றிய வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு,

திருவாரூர் ஒன்றியத்தில் 37 ஆயிரத்து 993 ஆண் வாக்காளர்களும், 39 ஆயிரத்து 185 பெண் வாக்காளர்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 14 பேர் என மொத்தம் 77 ஆயிரத்து 192 பேர் உள்ளனர். இதேபோல் நன்னிலம் ஒன்றியத்தில் 39 ஆயிரத்து ஒரு ஆண் மற்றும் 38 ஆயிரத்து 41 பெண் மற்றும் இதர ஒருவர் என மொத்தம் 77 ஆயிரத்து 43 வாக்காளர்கள் உள்ளனர். குடவாசல் ஒன்றியத்தில் 38 ஆயிரத்து 264 ஆண் வாக்காளர்கள் 37 ஆயிரத்து 139 பெண் வாக்காளர்கள் மற்றும் இதரர் 2 பேர் என மொத்தம் 75 ஆயித்து 405 பேர் உள்ளனர். கொரடாச்சேரி ஒன்றியத்தில் 41 ஆயிரத்து 444 ஆண் மற்றும் 42 ஆயிரத்து 306 பெண் மற்றும் இதரர் 3 பேர் என மொத்தம் 83 ஆயிரத்து 753 பேர் உள்ளனர். வலங்கைமான் ஒன்றியத்தில் 33 ஆயிரத்து 834 ஆண் மற்றும் 33 ஆயிரத்து 433 பெண் மற்றும் இதரர் 2 பேர் என மொத்தம் 67 ஆயிரத்து 269 பேர் உள்ளனர்.மன்னார்குடியில் 51 ஆயித்து926 ஆண், 53 ஆயிரத்து 147 பெண் மற்றும் இதரர் 4 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 77 பேர் உள்ளனர். நீடாமங்கலத்தில் 45 ஆயிரத்து 78 ஆண், 46 ஆயிரத்து 714 பெண் மற்றும் இதரர் ஒருவர் என மொத்தம் 91 ஆயிரத்து 793 பேர் உள்ளனர். கோட்டூரில் 41 அயிரத்து 946 ஆண் , 42 ஆயிரத்து 688 பெண் என மொத்தம் 84 ஆயிரத்து 634 வாக்காளர்கள் உள்ளனர்.

திருத்துறைப்பூண்டியில் 34 ஆயிரத்து 311 ஆண், 34 ஆயிரத்து 870 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 69 ஆயிரத்து 181 பேர் உள்ளனர். முத்துப்பேட்டையில் 32 ஆயிரத்து 46 ஆண் , 32 ஆயிரத்து786 பெண் மற்றும் இதர ஒருவர் என மொத்தம் 64 ஆயிரத்து 833 வாக்காளர்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 ஒன்றியங்களிலும் சேர்த்து 3 லட்சத்து 95 ஆயிரத்து 843 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 309 பெண் வாக்காளர்கள் மற்றும் இதரர் 28 பேர் என மொத்தம் 7 லட்சத்து 96 ஆயிரத்து 180 வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு நாளை நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Tiruvarur district ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி