கரூரில் லோக் அதாலத் பாதியில் இறக்கி விட்டதால் ஆத்திரம் பேருந்து கண்ணாடியை உடைத்த போதை வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

கரூர், டிச. 5: கரூர் அருகே பாதியில் பேருந்தை விட்டு இறக்கி விட்ட ஆத்திரத்தில், கல்லை எறிந்து கண்ணாடியை உடைத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் பேரூந்து நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று, நேற்று காலை 6மணியளவில் கொடுமுடிக்கு புறப்பட்டுச் சென்றது. பேரூந்தை சசிக்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த பேரூந்து ஈரோடு சாலை குட்டைக்கடை அருகே சென்ற போது, அந்த நிறுத்தத்தில் 40வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொடுமுடி செல்வதற்காக ஏறியுள்ளார். பஸசில் ஏறிய நிமிடத்தில் இருந்து குடிபோதையில் உளறிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பயணிகள் அனைவரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், அந்த பேருந்து தனியார் பள்ளி அருகே சென்ற போது, பேருந்து நிறுத்தப்பட்டு, நடத்துனர் வாலிபரை பஸ்சில் இருந்து இறக்கி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபா், கல்லை எடுத்து, பஸ்சின் பின்புற கண்ணாடி மீது எறிந்துள்ளார். இதில், பின்புற கண்ணாடி சேதமடைந்து. உடனடியாக, பஸ்சை நிறுத்திய டிரைவர், பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>