தேசிய அளவிலான ஓவியப்போட்டி ஈரோடு ஜேசீஸ் பள்ளி மாணவி சாதனை

ஈரோடு, டிச. 5:  குழந்தைகளுக்கான தனியார் பத்திரிக்கை ஒன்றின் சார்பில் தேசிய அளவிலான ஓவியப்பொட்டி நடந்தது. இதில் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜோத்ஸ்னா பங்கேற்றார். போட்டியில் தனது ஓவிய திறனை வெளிப்படுத்தி மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சாதனை செய்த மாணவியை பள்ளி தலைவர் முத்துசாமி, தாளாளரும் செயலாளருமான சந்திரசேகரன், துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியம், துணை செயலாளர்கள் கோகுல சந்தானகிருஷ்ணன், நாகராஜன், முதல்வர் முத்து கிருஷ்ணன், ஓவிய ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

Related Stories:

>