×

கிராமப்புறங்களில் சித்த மருத்துவமனை துவங்க மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 5:    மாநில பாரம்பரிய மற்றும் பட்டதாரி சித்த மருத்துவ சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். தொழிலதிபர் மதிவாணன் கலந்து கொண்டார். மாநில செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநிலத் துணைத்தலைவராக பட்டதாரி மருத்துவர் பாலச்சந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் ஈரோட்டில் ஜனவரி மாதம் சித்த மருத்துவ மாநாடு நடத்துவது, பாரம்பரிய சித்த மருத்துவத்தை பாதுகாக்கவும், உரிமையை நிலைநாட்டவும் பட்டதாரி மற்றும் பாரம்பரிய மருத்துவர்களை இணைத்து கிராமந்தோறும் பகுதிநேர சித்த மருத்துவமனை தொடங்கிட அரசை கேட்டுக்கொள்வது, அரசு கொள்கை முடிவு எடுத்து பாரம்பரிய வைத்தியங்களை அடையாளங்கண்டு ஒழுங்கு படுத்த வேண்டும்.   மேலும் சித்த மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொதுச்செயலாளர் அருள் நாகலிங்கம் நன்றி கூறினார்.

Tags : Doctors ,areas ,Siddha Hospital ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை