225 கிராம ஊராட்சிகளில் தேர்தல் களை கட்ட துவங்கியது

ஈரோடு, டிச. 5:   ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் தங்களது கிராம ஊராட்சி தலைவர்களை தேர்வு செய்ய வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர்.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் தேர்தல் திருவிழாவிற்கு வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் எலவமலை, கதிரம்பட்டி, கூரபாளையம், பேரோடு மேட்டுநாசுவன்பாளையம், பிச்சாண்டாம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும், கோபி ஊராட்சி ஒன்றியத்தில் அளுக்குளி, அம்மாபாளையம், அயலூர், பொம்மநாயக்கன்பாளையம், சந்திராபுரம், கருக்காம்பாளையம், கலிங்கியம், கோட்டுபுள்ளாம்பாளையம், குள்ளம்பாளையம், மேவாணி, மொடச்சூர், நாகதேவன்பாளையம், நஞ்சைகோபி, நாதிபாளையம், பாரியூர், பெருந்தலையூர், பொலவக்காளிபாளையம், சவண்டப்பூர், வெள்ளாளபாளையம், கொல்லங்கோவில், சிறுவலூர் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.  பவானி ஊராட்சி ஒன்றியத்தில் ஆலத்தூர், ஆண்டிக்குளம், சின்னபுலியூர், கவுந்தப்பாடி, மைலம்பாடி, ஓடத்துறை, ஒரிச்சேரி, பருவாச்சி, பெரியபுலியூர், புன்னம், சன்னியாசிப்பட்டி, தொட்டிபாளையம், வரதநல்லூர், வைரமங்கலம், ஊராட்சிக்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கும், அந்தியூர் ஒன்றியத்தில் பிரம்மதேசம், பர்கூர், சின்னதம்பிபாளையம், எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், கீழ்வாணி, கூத்தம்பூண்டி, குப்பாண்டம்பாளையம், மைக்கேல்பாளையம், மூங்கில்பட்டி, நகலூர், பச்சாம்பாளையம், சங்கராபாளையம், வேம்பத்தி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அட்டவணைபுதூர், பூதப்பாடி, சென்னம்பட்டி, குருவரெட்டியூர், காடப்பநல்லூர், கல்பாவி, கண்ணப்பள்ளி, கேசரிமங்கலம், கொமராயனூர், குறிச்சி, மாணிக்கம்பாளையம், மாத்தூர், முகாசிபுதூர், ஒட்டப்பாளையம், படவல்கால்வாய், பட்லூர், பூனாச்சி, புதூர், சிங்கம்பேட்டை, வெள்ளித்திருப்பூர் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பசுவபட்டி, எக்கட்டாம்பாளையம், எல்லைகிராமம், ஈங்கூர், கவுண்டிச்சிபாளையம், கொடுமணல், கூத்தம்பாளையம், குமாரவலசு, குப்பிச்சிபாளையம், குட்டப்பாளையம், முகாசிபிடாரியூர், முகாசிபுலவன்பாளையம், முருங்கத்தொழுவு, ஒட்டப்பாறை, பனியம்பள்ளி, புங்கம்பாடி, புதுப்பாளையம், பி.பாலத்தொழுவு, சிறுகளஞ்சி, வி.வெள்ளோடு, வரப்பாளையம், வாய்ப்பாடி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.  தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் பையன்னாபுரம், கேர்மாளம், ஆசனூர், இக்கலூர், மல்லங்குழி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, தாளவாடி, திங்களூர் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் சின்னவீரசங்கிலி, கந்தம்பாளையம், கராண்டிபாளையம், கருக்குபாளையம், கல்லாகுளம், கம்புளியம்பட்டி, குள்ளம்பாளையம், மடத்துபாளையம், மேட்டுப்புதூர், மூங்கில்பாளையம், முள்ளம்பட்டி, நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், பட்டக்காரன்பாளையம், பாப்பம்பாளையம், பெரியவிளாமலை, பெரியவீரசங்கிலி, பொன்முடி, போலநாயக்கன்பாளையம், செல்லப்பம்பாளையம், சீனாபுரம், சிங்கநல்லூா், சுள்ளிபாளையம், துடுப்பதி, திருவாச்சி, தோரணவாவி, திங்களூர், வெட்டையங்கிணறு, விஜயபுரி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், சத்தியமங்கலம், முகாசிஅனுமன்பள்ளி, முத்துக்கவுண்டன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, நஞ்சை காலமங்கலம், பழமங்கலம், பூந்துறைசேமூர், புதூர், புஞ்சை பாலமங்கலம், துய்யம்பூந்துறை, வேலம்பாளையம், விளக்கேத்தி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

 பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் தேசிபாளையம், காரப்பாடி, காவிலிபாளையம், கொத்தமங்கலம், மாதம்பாளையம், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம், உத்தண்டியூர், வரப்பாளையம், விண்ணப்பள்ளி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆண்டிபாளையம், அஞ்சனூர், எம்மாம்பூண்டி, கெட்டிசெவியூர், கூடக்கரை, கடத்தூர், தாழ்குனி, வேமாண்டம்பாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கும், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அக்கரை கொடிவேரி, அரக்கன்கோட்டை, கணக்கம்பாளையம், ஒடையாக்கவுண்டன்பாளையம், புஞ்சைதுறையம்பாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசூர், சிக்கரசம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர், இக்கரை நெகமம், இண்டியம்பாளையம், கொமரப்பாளையம், கோணமூலை, கூத்தம்பாளையம், மாக்கினாங்கோம்பை, புதுப்பீர்கடவு, ராஜன் நகர், சதுமுகை, செண்பகபுதூர், உக்கரம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. கிராம ஊராட்சி பகுதிகளில் மட்டுமே தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் தேர்வு என்பதால் தேர்தல் திருவிழா கிராமப்புறங்களில் களை கட்ட தொடங்கியுள்ளது.

Related Stories:

>