×

எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களான செங்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 42க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை 5, 6ல் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் 10.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த ரயிலில் 30க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக ரயில்ேவ போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி ரயில்வே போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடைமேடை ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது 33 மூட்டைகளில் 60 கிலோவில் 1980 கிலோ அரிசியும், 2 மூட்டைகளில் 10 கிலோவில் 20 கிலோ அரிசி என 2000 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இத்தனை மூட்டைகளும் ஒரே ரயில் நிலையத்தில் ஏற்றப்பட்டதா? அல்லது வெவ்வேறு ரயில் நிலையத்தில் ஏற்றப்பட்டதா? எங்கே கொண்டு செல்கின்றனர்? பொதுமக்களிடம் வாங்கினார்களா? அல்லது ரேஷன் கடைகளில் மொத்தமாக வாங்கினார்களா? என விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Erampur ,railway station ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...